பெண் எலும்புக்கூடு கண்டெடுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-05-12 21:46 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
எலும்புக்கூடு 
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் குன்னூர் சாலையில் உள்ள சுடுகாடு ஒன்றின் அருகே உள்ள முட்புதருக்குள் எலும்புக்கூடு ஒன்று இருப்பதாக கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது முட்புதரில் சென்று தேடிப்பார்த்த போது இறந்து சுமார் 2 மாதம் ஆன நிலையில் எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. அந்த எலும்புக்கூட்டில் பெண்ணின் நீள தலை முடியும் இருந்துள்ளது.
பிரேத பரிசோதனை 
இதனைதொடர்ந்து கிருஷ்ணன்கோவில் போலீசார் அந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர். 
அந்த பெண்ணை யாராவது கொலை செய்து முட்புதரில் வீசி சென்றார்களா? அல்லது இறந்து போன பெண்ணின் உடலை  வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் எலும்புக்கூடுகள் மட்டும் இருப்பதால் கிருஷ்ணன்கோவில் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவர்களை எலும்புக் கூடு இருந்த இடத்துக்கு அழைத்து வந்து பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகு தான் அந்த பெண் யார்? கொலையா? என்பன போன்ற முழு விவரங்கள் தெரியவரும்.

மேலும் செய்திகள்