அயோத்தியாப்பட்டணத்தில் பூட்டிய வீட்டில் தொழிலாளி பிணம் இறந்தது எப்படி? போலீசார் விசாரணை

அயோத்தியாபட்டணத்தில் பூட்டிய வீட்டில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2021-05-13 02:16 IST
அயோத்தியாப்பட்டணம்:
அயோத்தியாபட்டணத்தில் பூட்டிய வீட்டில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓட்டல் தொழிலாளி
அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஒரு வங்கியின் பின்புறம் குமார் என்பவரது வீடு உள்ளது. இந்த வீட்டின் முதல் மாடியில் கடந்த 7 ஆண்டுகளாக இப்ராகிம் (வயது 57) என்பவர் வாடகைக்கு குடியிருந்தார்.
இவர் சேலத்தில் உள்ள ஒரு பிரியாணி உணவகத்தில் சர்வராக வேலைபார்த்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா காரணமாக உணவகத்தில் பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வேலையின்றி 10 நாட்களாக வீட்டிலேயே இருந்துள்ளார்.
வீட்டுக்குள் பிணம்
கடந்த 2 நாட்களாக இப்ராகிம் வீட்டைவிட்டு வெளியில் வராததால், வீட்டின் உரிமையாளர் குமார் நேற்று காலை 9 மணி அளவில் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கதவு உள்ளே பூட்டி இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். 
அங்கு இப்ராகிம் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் உள்ளிட்டோர் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இப்ராகிம் இறந்தது எப்படி? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்