சேலம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் தினம் கொண்டாட்டம்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2021-05-12 20:21 GMT
சேலம்:
மருத்துவத்துறையில் தன்னலம் பாராமல் பொது சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரியும் செவிலியர்களை போற்றும் வகையில் நேற்று செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் செவிலியர்கள் சார்பில் நேற்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள நைட்டிங்கேல் சிலைக்கு செவிலியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு விருப்பு வெறுப்பின்றி சிகிச்சை அளிப்போம் என்று செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் செவிலியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். 
இதேபோல் மேட்டூர், ஓமலூர், ஆத்தூர் அரசு மருத்துவமனைகளிலும் நேற்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அங்கு பணிபுரியும் செவிலியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் செய்திகள்