பூத்துக்குலுங்கும் மே பிளவர் மரங்கள்
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் ஏராளமான மே பிளவா் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இவை காலநிலைக்கு ஏற்ப பூத்துக்குலுங்கும். தற்போது மே மாதத்தை முன்னிட்டு பர்கூர் மலைப்பகுதியில் ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள மே பிளவர் மரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. மரத்தின் இலைகள் தெரியாத அளவிற்கு சிவப்பு நிறத்தில் பூக்கள் அதிக அளவில் பூத்து உள்ளன.