மருந்து கடை உரிமையாளர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் ஆலோசனை
மருந்து கடை உரிமையாளர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் ஆலோசனை நடத்தினார்
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் உடையார்பாளையம், ஆண்டிமடம் தாலுகாவை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர்களுடன் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்து வழங்க வேண்டும். காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், மருந்து வணிகர் சங்க மாவட்டத் தலைவர் கருணாகரன், பொருளாளர் கார்த்திகேயன், மொத்த விற்பனை மருந்து வணிகர் சங்க தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த் நன்றி கூறினார்.