3-வது நாள் ஊரடங்கு: ஈரோடு மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தீவிரம் சாலைகள் வெறிச்சோடின
ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளான நேற்று கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.
ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளான நேற்று கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.
முழு ஊரடங்கு
தமிழ்நாடு முழுவதும் நேற்று 3-வது நாளாக கொரோனா முழுஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. வழக்கம்போல நேற்று காய்கறி சந்தையில் மொத்த வியாபாரம் நடந்தது. அப்போது ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் சந்தையில் கூடினார்கள். காலை நேரத்திலேயே வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் ஓடாமல் பாலம் வெறிச்சோடி கிடந்தது.
அவ்வப்போது சென்ற வாகனங்களையும் போலீசார் விசாரித்து அனுப்பினார்கள். மதியத்துக்கு பின்னர் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. இரவு நேரங்களில் அனுமதிக்கப்பட்ட வேலைகளுக்கு சென்று திரும்பியவர்கள் மட்டுமே வாகனங்களில் சென்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் ரோடுகள், வீதிகள் வெறிச்சோடின.
தடுப்பு வேலி
ஈரோடு மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்லாமல் இருக்க 2 பக்கமும் தடுப்பு வேலி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லவில்லை. மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, காந்திஜி ரோடு ஆகியவை வெறிச்சோடின.
அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டுமே திறந்து இருந்தன