ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்த 155 பேருக்கு அபராதம்

ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்த 155 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2021-05-12 19:29 GMT
பெரம்பலூர்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு கடந்த 10-ந் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன்கருதி முழு ஊரடங்கில் இருந்து மதியம் 12 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் கடைகளை மட்டும் திறக்க அரசு அனுமதித்துள்ளது. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.  ஆனால், மதியம் 12 மணிக்கு பிறகும் ஊரடங்கை மீறி சிலர் தங்களது இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றி வருகின்றனர். பெரம்பலூர் தாசில்தார் சரவணன் தலைமையில் துணை தாசில்தார்கள், போலீசாருடன் இணைந்து நகர்ப்பகுதியில் 10 இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலைய பகுதியில் பெரம்பலூர் தாசில்தார் சரவணன் தலைமையில், பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்து, அதில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். அந்தவகையில் பெரம்பலூர் நகர்ப் பகுதியில் நேற்று மட்டும் மொத்தம் 155 பேரிடம் இருந்து ரூ.32 ஆயிரத்து 200 அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்