ஊரடங்கை மீறி கண்மாயில் மீன் பிடிக்க முயன்ற 24 பேர் மீது வழக்கு

ஊரடங்கை மீறி கண்மாயில் மீன் பிடிக்க முயன்ற 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-12 19:26 GMT
மேலூர்,மே.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து அதிக அளவு ஆட்களை அழைத்து வந்து திருவாதவூர் மல்லாங்குளம் கண்மாயில் மீன் பிடிக்க சிலர் முயன்றனர். இது குறித்து தகவலறிந்த மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகுபதிராஜா மற்றும் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று மீன்களை பிடிக்க 2 மினி வேன்களில் வந்தவர்களை வழிமறித்தனர்.
மேலும் மல்லாங்குளம் கண்மாயின் மீன்பிடி குத்தகைதாரர் திருவாதவூரை சேர்ந்த செல்வம் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த 23 பேர் மீது ஊரடங்கு தடை உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்து 2 மினி வேன்களை மேலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்