அரியலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம்

அரியலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது

Update: 2021-05-12 19:22 GMT
தாமரைக்குளம்
மருத்துவ துறைக்கு பெரும் பங்காற்றிய செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக ஆண்டுதோறும் மே மாதம் 12-ந் தேதி செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி அரியலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின்னர் மருத்துவர்கள் மற்றும் சக செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரகு, செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னதாக பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். செவிலியர்களுக்கு வாட்ஸ் அப், முகநூல் மூலமும் உறவினர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்