துப்பாக்கி தொழிற்சாலை சார்பில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு 20 சக்கர நாற்காலிகள்

துப்பாக்கி தொழிற்சாலை சார்பில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு 20 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.;

Update: 2021-05-12 19:15 GMT
திருச்சி,
திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வரக்கூடிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அதற்கேற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு உதவும் வகையில் சமூக பங்களிப்பு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான உபகரணங்களை வழங்க திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, முதல் கட்டமாக நேற்று கொரோனா நோயாளிகளை உட்கார வைத்து அழைத்துச் செல்வதற்காக 20 சக்கர நாற்காலிகளை அரசு மருத்துவமனை டீன் வனிதாவிடம், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் துப்பாக்கி தொழிற்சாலை தீயணைப்பு அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடுத்தடுத்த கட்டங்களாக மேலும் உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாக அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்