ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம், உணவு பொட்டலம் வழங்கல்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம், உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.;

Update: 2021-05-12 19:09 GMT
ஸ்ரீரங்கம்,
இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் பெரிய கோவில்களின் மூலம் பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர், உணவு பொட்டலங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார். அதன்படியும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத கோவில் சார்பில் நேற்று ரெங்கா ரெங்கா கோபுரம் அருகே சுமார் 100 பேருக்கு முககவசம், சுமார் 200 பேருக்கு கபசுர குடிநீர், சுமார் 440 பேருக்கு உணவு பொட்டலங்கள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு சுமார் 100 பேருக்கு உணவு பொட்டலங்களும் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு சுமார் 100 உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன. மேலும் ரெங்கநாத சுவாமி கோவிலின் சார்பு கோவில்களான உறையூர் நாச்சியார் கோவில், திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோவில், அன்பில் ஸ்ரீமாரியம்மன் கோவில்கள் மூலமாக தலா 50 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்