கொரோனாவுக்கு தாய் பலியான அதிர்ச்சியில் மகனும் சாவு

மண்டியா அருகே கொரோனாவுக்கு தாய் பலியான அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மகனும் இறந்து விட்டார்.

Update: 2021-05-12 18:32 GMT
பெங்களூரு:

தாய்க்கு கொரோனா

மண்டியா மாவட்டம் சுபாஷ்நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவரது தாய் சுஜாதா (60). ரமேசுக்கு திருமணமாகி விட்டது. அவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவருடன் வாழ பிடிக்காமல் விவகாரத்து பெற்று விட்டார். 

இதனை ெதாடர்ந்து ரமேஷ் தனது தாயுடன் சமீபமாக வசித்து வந்தார். கடந்த 7-ந் தேதி சுஜாதாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சுஜாதாவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்காக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ரமேஷ் மனம் உடைந்து வாழ்ந்து வந்தார்.

மகனுக்கு மாரடைப்பு

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சுஜாதா பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி வீட்டில் இருந்த ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாய் இறந்தது பற்றி அறிந்ததும் ரமேஷ் மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ரமேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிர் இழந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய் கொரோனாவுக்கு பலியான அதிர்ச்சியில் ரமேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவரும் உயிர் இழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சுபாஷ்நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்