ஒரே நாளில் 34,752 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ்

கர்நாடகத்தில் ஒரே நாளில் 34, 572 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Update: 2021-05-12 18:21 GMT
பெங்களூரு: 

 
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பரிசோதனைகள்

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 34 ஆயிரத்து 792 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 39,998 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 53 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 517 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 368 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரே நாளில் 34,752 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 40 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 92 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 16,286 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாம்ராஜ்நகரில் 517 பேர்

பாகல்கோட்டையில் 610 பேர், பல்லாரியில் 1,823 பேர், பெலகாவியில் 856 பேர், பெங்களூரு புறநகரில் 1,138 பேர், பீதரில் 281 பேர், சாம்ராஜ்நகரில் 517 பேர், சிக்பள்ளாப்பூரில் 554 பேர், சிக்கமகளூருவில் 646 பேர், சித்ரதுர்காவில் 192 பேர், தட்சிண கன்னடாவில் 1,077 பேர், தாவணகெரேயில் 362 பேர், தார்வாரில் 904 பேர், கதக்கில் 347 பேர், ஹாசனில் 1,572 பேர், ஹாவேரியில் 189 பேர், கலபுரகியில் 646 பேர், குடகில் 678 பேர், கோலாரில் 815 பேர், கொப்பலில் 278 பேர், மண்டியாவில் 1,223 பேர், மைசூருவில் 1,773 பேர், ராய்ச்சூரில் 289 பேர்,

 ராமநகரில் 135 பேர், சிவமொக்காவில் 1,125 பேர், துமகூருவில் 2,360 பேர், உடுப்பியில் 919 பேர், உத்தரகன்னடாவில் 960 பேர், விஜயாப்புராவில் 690 பேர், யாதகிரியில் 753 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 275 பேரும், பல்லாரியில் 17 பேரும், பீதரில் 7 பேரும், சாம்ராஜ்நகரில் 8 பேரும், சிக்பள்ளாப்பூரில் 6 பேரும், சிக்கமகளூருவில் 2 பேரும், சித்ரதுர்காவில் 5 பேரும், தட்சிண கன்னடாவில் 2 பேரும், தாவணகெரேயில் ஒருவர், தார்வாரில் 8 பேரும், கதக்கில் 4 பேரும், ஹாசனில் 19 பேரும், ஹாவேரியில் 10 பேரும், கலபுரகியில் 23 பேரும், குடகில் 10 பேரும், கோலாரில் 2 பேரும், கொப்பலில் 12 பேரும், மண்டியாவில் 10 பேரும், மைசூருவில் 9 பேரும், ராய்ச்சூரில் 3 பேரும், ராமநகரில் 5 பேரும், சிவமொக்காவில் 26 பேரும், துமகூருவில் 14 பேரும், உடுப்பியில் 6 பேரும், உத்தரகன்னடாவில் 8 பேரும், விஜயாப்புராவில் 8 பேரும், யாதகிரியில் 4 பேரும் என மொத்தம் 517 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசு கவலை

கர்நாடகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு குறிப்பிடும்படியாக அதிகரிக்காமலும், அதே நேரத்தில் குறையாமலும் உள்ளன. ஆனால் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது கர்நாடக அரசை கவலை அடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்