கீற்றுக்கொட்டகையில் தீ

கீற்றுக்கொட்டகையில் திடீரென்று தீப்பிடித்தது.

Update: 2021-05-12 18:08 GMT
ஆலங்குடி,மே.13-
ஆலங்குடி பட்டேல் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சொந்தமான  கீற்றுக்கொட்டகையில் திடீரென்று தீப்பிடித்தது. இது குறித்து அப்பகுதியினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். எனினும் கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பக்கத்து வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்து அணைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்