ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவையாள அளவுக்கு இருப்பு - கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேவாயாள அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

Update: 2021-05-12 17:54 GMT
அரக்கோணம்,

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் இருப்பு இடங்களை பார்வையிட்டு, மருந்து இருப்பு குறித்தும் மருத்துவ அலுவலர் நிவேதிதாவிடம் கேட்டறிந்தார். 

மேலும் அரசு மருத்துவமனை எதிரில் டவுன்ஹாலில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தினையும் பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 250 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாலாஜா அரசு மருத்துவமனையில் மட்டும் 150 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி இருப்பு உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்த வரையில் ஆக்சிஜன் தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. 

ஆக்சிஜன் பற்றாக்குறையால் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இருந்து கடந்த ஒரு வாரமாக நோயாளிகள் வேறு எங்கும் மாற்றம் செய்யவில்லை. டாக்டர்கள், நர்சு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அரக்கோணம் தாலூகாவில் 60 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவும், தனிமைப்படுத்தப்பட்ட இடமும் ஓரே பகுதியில் இருப்பதால் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு அவர்களின் உதவிக்கு உள்ளே வருவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். டாக்டர்களை முழுமையாக நம்புங்கள். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்