புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.;

Update: 2021-05-12 17:42 GMT
புதுக்கோட்டை, மே.13-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.
கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. மாவட்டத்தில் நேற்று மிக அதிகமாக புதிதாக 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 170 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 1,325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 2 பேர் இறந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பதிக்கப்பட்டு 171 பேர் இறந்துள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த 73 வயது மூதாட்டி தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் 67 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானார்.
அரிமளம்
அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 26 பேருக்கும், ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்