ஆலங்குடி,மே.13-
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். டாக்டர்கள் விவேக் ராஜ், மார்சல், மணிவண்ணன், சிவசங்கரி கீதா மற்றும் அனைத்து செவிலியர்களும், மருத்துவமனைப்பணியாளர்களும் கலந்துகொண்டனர். கொரோனா காலத்தில் உயிர்நீத்த செவிலியர்களின் தியாகத்தை பாராட்டும் வண்ணம் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி ரூ.10 ஆயிரம் மதிப்பிலான நினைவுப்பரிசை வழங்கினார். முடிவில் மோனோபாய் நன்றி கூறினார்.