குப்பை கிடங்கில் தீப்பிடித்தது

குப்பை கிடங்கில் தீப்பிடித்தது

Update: 2021-05-12 17:35 GMT
தேவகோட்டை
தேவகோட்டை ராம்நகர் பவர் ஹவுஸ் அருகில் நகராட்சி குப்பை கிடங்கில் நள்ளிரவில் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். 
குப்பை கிடங்கை குடியிருப்பு பகுதியில் அமைப்பதற்கு அப்பகுதியில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் குப்பை கிடங்கை  நகராட்சி நிர்வாகம் அமைத்தது. குப்பை கிடங்கில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் தற்போது திடீர் தீ பிடிப்பு சம்பவம் இதனால் அப்பகுதி மக்கள் உயிர் வாழ பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. 
துர்நாற்றம் எப்பொழுதும் வெளியேறுவதால் தொற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 
தற்போது வளர்ந்து வரும் நகரின் முக்கிய பகுதியான இப்பகுதி இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். 
பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் முன் நகராட்சி நிர்வாகம் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்