பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் 2 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-05-12 17:17 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகரில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சப்-கலெக்டர் வைத்தி நாதன், தாசில்தார் அரசகுமார் தலைமையில் பல்வேறு துறை ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஊழியர்கள் 2 பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, தபால் நிலையம் மற்றும் சுற்றுப்பகுதியில் உடனடியாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, வழக்கம்போல் வாடிக்கையாளர்களுக்கான சேவை பணிகள் தொடர்ந்தது. 

தபால் நிலையத்திற்குள் முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும் கிருமிநாசினியால் கைகள் கழுவி, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்