நெமிலி பேரூராட்சியில் கொரோனா தொற்றை கண்டறிய 3 குழுக்கள் அமைப்பு
நெமிலி பேரூராட்சியில் கொரோனா தொற்றை கண்டறிய 3 குழுக்கள் அமைப்பு
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவின் பேரில் நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் கொரோனா தொற்றை கண்டறிய மூன்று கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 9 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை எடுத்துக் கூறவும், மேலும் இவர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.