கோவை
கோவை இடையர் வீதியில் உள்ள ஒரு குடோனில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வெரைட்டிஹால் ரோடு போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1062 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வடமாநில வியாபாரி சின்மோ கோரா (வயது 45) கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.