மணல் கொள்ளைக்கு உதவியதாக‌ போலீஸ் ஏட்டுகள் 2 பேர் பணியிட மாற்றம். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

மணல் கொள்ளைக்கு உதவியதாக‌ போலீஸ் ஏட்டுகள் 2 பேர் பணியிட மாற்றம். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

Update: 2021-05-12 17:08 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே கொண்டபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மணல் கொள்ளை கும்பலுக்கு உதவியதாக கொண்டபாளையம் போலீஸ் ஏட்டுகள் பச்சையப்பன், சங்கர் உள்பட போலீசார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் சிலர் மீது ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத் வேலூர் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். 

இதனிடையே, மணல் கொள்ளைக்கு உதவிய வழக்கில் தொடர்புடைய ஏட்டு பச்சையப்பன் அவலூர் போலீஸ் நிலையத்திற்கும், சங்கர் காவேரிபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் போலீஸ் ஏட்டுகள் இருவரும் பணம் வாங்கிக்கொண்டு மணல் கொள்ளைக்கு உதவியது விசாரணையில் உறுதியானது. அதைத்தொடர்ந்து ஏட்டு பச்சையப்பன் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கும், ஏட்டு சங்கர் ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவிட்டார்.‌

மேலும் செய்திகள்