கடலூரில் இருந்து அத்தியாவசிய தேவையின்றி சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போலீசார் நடவடிக்கை

கடலூரில் இருந்து அத்தியாவசியத் தேவை இன்றி புதுச்சேரி சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-12 17:07 GMT

கடலூர், 


கடலூர் மாவட்ட எல்லையோரம் புதுச்சேரி மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இது தவிர உயிர் சேதமும் அதிகரித்துள்ளது.

இதை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி மாநில எல்லைப்பகுதியான கடலூரை ஒட்டியுள்ள முள்ளோடையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி தீவிர விசாரணை நடத்தினர். 

இதையடுத்து அத்தியாவசிய தேவையின்றி சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். ஒரு சிலரை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

அபராதம்

இதேபோல் கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் கடலூர் புதுநகர் போலீசார், போக்குவரத்து போலீசார் இணைந்து புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த வாகன ஓட்டிகளை வழிமறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அத்தியாவசிய தேவை இன்றி வந்த நபர்களிடம் அபராதம் வசூல் செய்தனர்.

மேலும் செய்திகள்