கம்பம் போலீஸ் ஏட்டு கொரோனாவுக்கு பலி

கம்பத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு கொரோனாவுக்கு பலியானார்.

Update: 2021-05-12 16:33 GMT
தேனி:
தேனி மாவட்டம் கம்பம் சாமாண்டிபுரத்தை சேர்ந்தவர் ராயர் (வயது 52). இவர் கோம்பை போலீஸ் நிலைய பகுதியில், திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு (ஓ.சி.ஐ.யு.) போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு அவர் சிகிச்சை பெற்ற நிலையில், 2 நாட்களுக்கு பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் நுரையீரலில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராயர் நேற்று பரிதாபமாக இறந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இதற்கிடையே தேனி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 438 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு 25 ஆயிரத்து 37 ஆக உயர்ந்தது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 3 ஆயிரத்து 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்