இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் இடமாற்றம்
மதுரையில் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை நகரில் பணிபுரியும் 8 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் பிரேம் ஆன்ந்த சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி சீனிவாசன் (மாட்டுத்தாவணி போலீஸ் நிலையம்) -தீவிர குற்றத்தடுப்பு பிரிவு. ரவீந்திரன் (கீரைத்துறை சட்டம் ஒழுங்கு) - மாட்டுத்தாவணி. ஆறுமுகம் (காவல் கட்டுப்பாட்டு அறை) - தீவிர குற்றத்தடுப்பு பிரிவு 2.
முகமது இஸ்திரீஸ் (தீவிர குற்றத்தடுப்பு பிரிவு) - தல்லாகுளம் சட்டம் ஒழுங்கு. பொத்துராஜ் (தீவிர குற்றத்தடுப்பு பிரிவு 2) - கீரைத்துறை சட்டம், ஒழுங்கு.
கீதாலட்சுமி (காவல் கட்டுப்பாட்டு அறை) - டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம். வனசுந்தர் (தல்லாகுளம்) -காவல் கட்டுப்பாட்டு அறை.
அமுதா (டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையம்) - காவல் கட்டுப்பாட்டு அறை.
இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.