மதுரையில் 2 வாலிபர்கள் உள்பட 7 பேர் ெகாரோனாவுக்கு பலி

மதுரையில் நேற்று 1,172 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 2 வாலிபர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-05-12 16:17 GMT
மதுரை,
மதுரையில் நேற்று 1,172 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 2 வாலிபர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
புதிதாக 1,172 பேர்
மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்றும் I,172 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 850 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை 42 ஆயிரத்து 237 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நேற்று 656 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இது வரை 34 ஆயிரத்து 534 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது.
7 பேர் உயிரிழப்பு
மதுரையில் தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதில் 2 பேர் 29, 37 வயது வாலிபர்கள் ஆவர்.
 மேலும் 43, 63, 70 வயது ஆண்கள், 54, 65 வயது பெண்களும் அடங்குவர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்