கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம்

கோத்தகிரியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Update: 2021-05-12 14:25 GMT
கோத்தகிரி

கோத்தகிரியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

கொரோனா தடுப்பூசி 

கொரோனா 2-வது அலை காரணமாக நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

நோய் பரவலை தடுக்க ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட பலர் ஆர்வம் காட்டி வருவதால், பற்றாக்குறை அதிகம் நிலவி வருகிறது. கூடுதலாக தடுப்பூசி வருவதற்கு ஏற்ப பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. 

பொதுமக்கள் ஆர்வம் 

இந்த நிலையில் கோத்தகிரியில் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை யிலேயே கோத்தகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து நீண்ட வரிசை யில் காத்து நின்று தடுப்பூசி போட்டுச்செல்கிறார்கள். 

இதுகுறித்து கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் சிவக்குமார் கூறும்போது, ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஏராளமானோர் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தடுப்பூசி போட்டுவிட்டு செல்கின்றனர். 

தற்போது போதுமான தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி போடாதவர்களும், 2-வது டோஸ் போடுவதற்காக காத்திருப்பவர் களும் வந்து தடுப்பூசி போட்டு பயனடையலாம் என்றார். 

மேலும் செய்திகள்