ஆறுமுகநேரி போலீஸ் குடியிருப்பில் கபசுர குடிநீர் வழங்கல்
ஆறுமுகநேரி போலீஸ் குடியிருப்பில் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் காவலர் குடியிருப்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஹர்ஸ்சிங் கலந்துகொண்டு காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து அங்குள்ள காவலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஆறுமுகநேரி சுகாதார ஆய்வாளர் மகாராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் நன்றி கூறினார்.