ஆற்றில் குதித்து தற்கொலை செய்த வாலிபரின் உடல் மீட்பு
கல்யாண் மேற்கு பார்வே கிராமத்தில், ஆற்றில் குதித்து தற்கொலை செய்த வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.
அம்பர்நாத்,
கல்யாண் மேற்கு பார்வே கிராமத்தில் வசித்து வந்தவர் மயூர் ஜாதவ் (வயது20). இவர் நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் கல்யாண் மேற்கு பட்கா ரோட்டில் உள்ள காந்தாரி ஆற்று பாலத்திற்கு வந்தார். பின்னர் அங்கு இருந்து ஆற்றில் குதித்தார். தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் வாலிபரின் உடலை தேடினர். இதில் நேற்று வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.
இந்தநிலையில் வாலிபர் தற்கொலை செய்யும் முன் அவரது வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் ஒன்றை வைத்து இருந்தார். அதில் அவர், மதுப்பழக்கம் ஒருவரின் வாழ்வில் மிகவும் மோசமானது என கூறியுள்ளார். இந்தநிலையில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.