விதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு ‘சீல்’
விதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு ‘சீல்’
ஆரணி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அதன்படி பகல் 12 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜ், வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள், போலீசார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், சிவகுமார், வருவாய் ஆய்வாளர் வேலுமணி ஆகியோர் ஆணி நகரில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணித்தனர்.
அப்போது மண்டி வீதியில் திறந்திருந்த சில ஜவுளி கடைகள், தையல் கடைகள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத டீ கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதேபோல ஜெனரல் ஸ்டோர் என்ற பெயரில் அரிசி வியாபாரம் செய்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. சமூக இடைவெளி கடைபிடிக்காத மளிகை கடைகளுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.