வேலூர் மாவட்டத்தில் 698 பேருக்கு கொரோனா

வேலூர் மாவட்டத்தில் 698 பேருக்கு கொரோனா;

Update: 2021-05-12 12:43 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 734 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் மேலும் 698 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 

வேலூர் மாநகராட்சி பகுதியில் 350-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று வேலூரில் தங்கி சிகிச்சை பெறும் பிற மாநிலங்களை சேர்ந்த 30 பேரும் பாதிக்கப்பட்டனர். கொரோனா கண்டறியப்பட்ட 698 பேரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவினால் 32 ஆயிரத்து 481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். 446 பேர் உயிரிழந்தனர். 3,607 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

மேலும் செய்திகள்