அரசு அனுமதியின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கைது

தானேயில் அரசு அனுமதியின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-05-12 12:01 GMT
தானே,

தானே மாவட்டம் வாங்கனி பகுதியில் டாக்டர் உமா சங்கர் குப்தா என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அவர், ஓமியோபதி மருந்துகள் மூலம் தன்னால் கொரோனாவை குணப்படுத்த முடியும் என கூறியிருந்தார்.

இது குறித்து உள்ளூர் சுகாதாரத்துறையினர் டாக்டர் மீது குல்காவ் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், டாக்டர் உமாசங்கர் குப்தா மற்றும் அவரது கிளினிக்கில் வேலை பார்க்கும் பெண் டாக்டரும் மாநில அரசு, மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து அனுமதி பெறாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் டாக்டர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் டாக்டர் உமாசங்கர் குப்தாவை கைது செய்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்