9 மாத சம்பள பாக்கியை வழங்கக்கோரி டேங்க் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

9 மாத சம்பள பாக்கியை வழங்கக்கோரி டேங்க் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2021-05-12 11:47 GMT
சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு ஒன்றியம் ஆத்துரை ஊராட்சியில்  வேலைபார்த்து வரும் டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சுமார் 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறப்பதில்லை. இதனால் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டுக்கே சென்று சம்பள பாக்கியை கொடுங்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் டரியான பதில் கூறவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை டேங் ஆபரேட்டர் சுப்பிரமணியன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரபியுல்லா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தன், மூர்த்தி ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவரிடம் பேசி அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு உத்தரவிட்டனர். சம்பளம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலைக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்