திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,204 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,204 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். உரிய சமூக இடைவெளியை பின்பற்றி நடக்கவேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார்கள். இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
1,204 பேர் பாதிப்பு
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 1,204 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 73 ஆயிரத்து 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 64 ஆயிரத்து 413 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
8 ஆயிரத்து 109 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 921 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 17 பேர் இறந்துள்ளனர்.