மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
ராதாபுரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள நம்பியான்விளை வடக்குத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்ற மணல் கண்ணன் (வயது 46). இவர் மீது மணல் திருட்டில் ஈடுபட்டதாக வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. எனவே கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் விஷ்ணுவிற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில், போலீசார் கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.