கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு அபராதம்
கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மணப்பாறை,
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது. திருச்சி மலைக்கோட்டை, மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, பகுதியில் போலீசாரும், காவல்துறையினரும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அரசின் உத்தரவுகளை பின்பற்றிடாமல் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டவாறு கடைகள், வங்கிகள், பொதுஇடங்களில் மக்கள் கூடுதல், வாகனங்களில் தேவையின்றி வலம் வந்தோர் என அனைத்து தரப்பினருக்கும் அவர்கள் அபராதம் விதித்தனர்.