விதிமுறைகளை மீறுபவர்களால் கொரோனா பரவும் அபாயம்

ஜெயங்கொண்டத்தில் விதிமுறைகளை மீறுபவர்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-11 20:20 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறந்து இருப்பதால், ஏராளமான மக்கள் ஜெயங்கொண்டம் கடை வீதிகளுக்கு வந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களும், டீக்கடைகளில் டீ குடிக்க வருபவர்களும் சமூக இடைவெளி இல்லாமல் நின்று பேசுகின்றனர். இதேபோல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளியுடன் 5 முதல் 6 பேரும், இறப்பு ஏற்பட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களும் என கூட்டம் கூடுவதால் கொரோனோ தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கடைவீதிகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களால் போக்குவரத்து நெரிசல் மற்றும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே காவல்துறையும், நகராட்சி துறையும் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்