கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2021-05-11 20:20 GMT
ஜெயங்கொண்டம்:
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஜெயங்கொண்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பஸ் நிலையம், கடைவீதிகளில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்கின்றனரா? சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனரா? என்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பஸ் நிலையம் மற்றும் கடைவீதிகளில் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக கூறி நபர் ஒன்றுக்கு ரூ.200 வீதமும், கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதமும் அபராதமாக விதித்து மொத்தம் ரூ.6,400 வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்