புதிய ஏ.டி.எம். எந்திரம் அமைக்க கோரிக்கை

புதிய ஏ.டி.எம். எந்திரம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-11 20:12 GMT
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள ஒரு வங்கியில் வயலூர், வசிஸ்டபுரம், காளிங்கராயநல்லூர், அத்தியூர் உள்பட சுமார் 10 கிராமங்களுக்கு மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கணக்கு தொடங்கி, வரவு, செலவு செய்து வருகின்றனர். இந்த வங்கி சார்பில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரம் பழுதாகி உள்ளது என்று அதனை எடுத்துச்சென்று விட்டார்கள். இதனால் ஏ.டி.எம். மையம் பூட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பணம் எடுக்கவும், செலுத்தவும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே வங்கி நிர்வாகம் உடனடியாக பணம் எடுக்க மற்றும் பணம் ெசலுத்தும் வசதியுள்ள ஏ.டி.எம். எந்திரத்தை அமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்