ஒரே குடும்பத்தினரை தாக்கிய வாலிபர் கைது

ஒரே குடும்பத்தினரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-05-11 19:19 GMT
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 48). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் (34) குடும்பத்தினருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சேகர் வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற கண்ணதாசன், அவரது மனைவி ஹேமலதா (25), தம்பி காரியக்காரன் (25), உறவினர் சின்னம்மாள் (30) ஆகிய 4 பேரும் சேர்ந்து சேகர், அவரது மனைவி நீலாவதி (42), மகன் தங்கராசு (25), நந்தகுமார் (18) ஆகிய 4 பேரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சேகர் அளித்த புகாரின்பேரில் கண்ணதாசன், காரியக்காரன், ஹேமலதா, சின்னம்மாள் ஆகிய 4 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரியக்காரனை கைது செய்தனர்.‌ மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று ஹேமலதா வீட்டு ஆடு, சேகர் வீட்டு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த ஆட்டை சேகர் மகன் நந்தகுமார் விரட்டி உள்ளார். இதுகுறித்து ஹேமலதா கேட்டபோது, நந்தகுமார் அங்கிருந்த கல்லை எடுத்து ஹேமலதாவை அடிக்க முற்பட்டுள்ளார். அப்போது அந்தக் கல் அங்கு நின்று கொண்டிருந்த காரியக்காரன் மகள் சுஷ்மிதா (4) மீது பட்டுள்ளது. இதில் காயமடைந்த சுஷ்மிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஹேமலதா அளித்த புகாரின்பேரில், நந்தகுமார் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்