போலி அடையாள அட்டை தயாரித்து விற்பனை
ஊரடங்கின் போது பயன்படுத்துவதற்காக போலி அடையாள அட்டை தயாரித்து விற்பனை
பெலகாவி, மே:
பெலகாவி மாவட்டம் கடேபஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் போலி அடையாள அட்டைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் கமிஷனர் விக்ரமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த அச்சகத்தில் கடே பஜார் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போ அங்கு போலி அடையாள அட்டைகள் தயாரித்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில் அவர்கள் விஸ்வநாத், ரோகித் என்று தெரிந்தது. இவர்களில் விஸ்வநாத் தான் அச்சகத்தை நடத்தி வந்துள்ளார்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கார் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றி திரிபவர்களிடம் இருந்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இவ்வாறு போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக தங்களுக்கு நெரிந்த நபர்களுக்கு அரசு ஊழியர்கள், நா்சுகள், மருந்து விற்பனையாளர் என பல்வேறு பெயர்களில் போலி அடையாள அட்டைகளை தயாரித்து விற்று கொடுத்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஏராளமான அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் மீதும் கடேபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.