மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு

விருதுநகரில் மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-05-11 18:55 GMT
விருதுநகர்,மே.
விருதுநகரில் காய்கறி மார்க்கெட் இடமாற்றம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைக்காக வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோட்டைப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் நோய்த்தடுப்பு விதிமுறைகளை மீறியதாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவர் முனீஸ்வரன், காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் நாகமணி மற்றும் கார்த்தி, பெரியசாமி, வடிவேல் உள்பட 30 பேர் மீது பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்