குளத்தில் குதித்து பெண் தற்கொலை

உப்பள்ளி அருகே கொரோனா பாதித்த பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.;

Update: 2021-05-11 18:51 GMT
உப்பள்ளி:


பெண் தற்கொலை

உப்பள்ளி தாலுகா அதர்குஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பசம்மா(வயது 50). இவர், கிராமத்தில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை பசம்மா, திடீரென்று கல்குவாரி அருகே உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், உப்பள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார், தீயணைப்பு படையிருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் உதவியுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்த பசம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு  போலீசார் அனுப்பி வைத்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் பசம்மா என்ன காணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. இதற்கிடையே பசம்மாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தினர்.

கொரோனா உறுதியாகி..

அதில் பசம்மாவின் செல்போனுக்கு, சுகாதாரத்துறையில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. 

இதனை ெதாடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பசம்மா கொரோனா பரிசோதனை செய்து இருந்ததும், அந்த பரிசோதனை அறிக்கை முடிவில் அவருக்கு கொரோனாவால் பாதிப்பு உறுதியானதும், இதனால் மனம் உடைந்த அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. 

இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொரோனா பாதித்ததால் பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதர்குஞ்சி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது. 

மேலும் செய்திகள்