ஒரே கிராமத்தில் கொரோனாவுக்கு 11 பேர் சாவு

பாகல்கோட்டை அருகே ஒரே கிராமத்தில் கொரோனாவுக்கு 11 பேர் சாவு

Update: 2021-05-11 18:25 GMT
பாகல்கோட்டை:


கர்நாடகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பலர் பலியாகி வருகின்றனர். ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்காமலும், சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமலும், ஆக்சிஜன் இவர்கள் இறந்து வருகின்றனர்.

பாகல்கோட்டை மாவட்டம் பனஹட்டி தாலுகாவில் நாவலகி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவா்கள் பலா் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நாவலகி கிராமத்தை சேர்ந்த 11 போ் இறந்து விட்டனர். இந்த விவகாரம் தாமதமாகத்தான் வெளியே தெரியவந்தது.

அத்துடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாவலகி கிராமத்தில் கொரோனாவுக்கு பலியான 11 பேருடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக 40 பேர் உயிர் இழந்திருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

அங்குள் ஒரு கோவிலில் சாமிக்கு திருவிழா நடத்தாமலும், பூஜைகள் செய்யப்படாமலும் இருப்பதாகவும், இதன் காரணமாக தான் மக்கள் அடுத்தடுத்து உயிர் இழந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்