மினி கிளினிக்கில் கொரோனா பரிசோதனை
மினி கிளினிக்கில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
காரைக்குடி,
காரைக்குடி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் ஏராளமான மக்கள் கூடி கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஏராளமான அரசு மினி கிளினிக்குகள் இயங்கி வருகிறது.
இதையொட்டி கடந்த சில நாட்களாக அதிகாலை முதல் ஏராளமான மக்கள் கொரோனா கிளினிக்கில் வந்து கொரோனா பரிசோதனை செய்ய குவிந்து வருகின்றனர். முதல் கட்டமாக இங்கு சளி எடுத்து கொரோனா பரிசோதனை செய்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் பின்னர் கொரோனா பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சிவகங்கையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கும், காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கும் அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெறுகின்றனர். மினிகிளினிக்குகளில் தடுப்பூசியும் போடப்படுகிறது.