சைபர்கிரைம் போலீசார் வழக்கு
முகநூலில் சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட போலீசார் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவரின் முகநூல் பக்கத்தில் இனிதான் ஆரம்பம், நான் மரணத்தை நோக்கி நடந்து கொண்டிருப்பவன், எனக்கு மரணம் பற்றி கவலை இல்லை என்ற வாசகத்துடன் கையில் வாள் போன்ற ஆயுதம் ஏந்தியபடி ஒரு வீடியோ பதிவு போடப்பட்டிருந்தது. அதில் மத ரீதியான பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து இதுகுறித்து தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட்சன் ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அந்த சர்ச்சைக்குரிய பதிவு செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.