ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 222 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 10 ஆயிரத்து 598 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 9 ஆயிரத்து 137 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 1314 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 147 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.