ரூ.4 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
கீரனூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்த ரூ.4 லட்சம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

மது பாட்டில்கள் பதுக்கல்
முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் கடந்த 10-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் ஆங்காங்கே மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கீரனூர் அருகே உடையாளிப்பட்டி பகுதியில் அண்ணாநகரில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையில் போலீசார் சென்றனர். அங்கு கலியபெருமாள் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு மதுபாட்டில்கள் பெட்டி, பெட்டியாக குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஒரு மினி டாஸ்மாக் கடை போல பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனை போலீசார் கைப்பற்றினர்.
3 பேர் கைது
பிராந்தி, ரம், பீர் வகைகள் என மொத்தம் 72 பெட்டிகளில் 3 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இது தொடர்பாக உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் விசாரணையில் ஆறுமுகம் (வயது 55) மற்றும் அவரது மகன் சக்திவேல் (33) ஆகிய 2 பேரும் ஊரடங்கு அமலாவதற்கு முன்பே பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக கலியபெருமாள் வீட்டில் பதுக்கி வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆறுமுகம், அவரது மகன் சக்திவேல் மற்றும் கலியபெருமாள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.