தூசி அருகே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் 8 பவுன் செயின் பறிப்பு

தூசி அருகே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் 8 பவுன் செயின் பறிப்பு

Update: 2021-05-11 17:12 GMT
தூசி

மெபெட்டில் சென்ற லெப் டெக்னிசியன் பெண்ணிடம் 8 சவரன் தாலி சரடு பறித்து ஓடிய பைக்கில் சென்ற மர்ம ஆசாமிகளை தூசி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
காஞ்சீபுரம் டவுன் வேதாச்சலம் நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி ரமா தேவி (வயது 33). இவர் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரத்தப்பரிசோதனை பிரிவில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார்.

கோரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாததால் நேற்று தனது மொபட்டில் வேலைக்கு வந்திருந்தார.் பணி முடிந்து நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் செய்யாறு- காஞ்சீபுரம் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவரை 2 பேர் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவன் ஹெல்மெட் அணிந்திருந்தான். மற்றொருவன் துணியால் முகத்தை மூடியிருந்தான். அவர்கள் மொபட்டை இடிப்பது போல் வந்து ரமாதேவி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர். இதில் ரமாதேவி நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். 

செயினை பறித்த 2 மர்ம ஆசாமிகளும் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ரமாதேவி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்