ராணுவ வீரரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே ராணுவ வீரரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2021-05-11 16:41 GMT
அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பல்லரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் முருகராஜ் (வயது 23). இவருக்கும், பொய்கை அரசூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகள் புவனா(21) என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் புவனா அவரது மாமா சத்யாவுடன் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதை கண்டித்ததால் முருகராஜிக்கும், புவனாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் புவனாவின் தந்தை அன்பழகன், தாய் தையல்நாயகி மற்றும் உறவினர்கள் முருகராஜியின் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசினர். அப்போது இரு குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புவனாவின் உறவினர்கள் முருகராஜை தாக்கியுள்ளனர். இதை தடுக்க முயன்ற முருகராஜின் தம்பியும், ராணுவ வீரருமான துரைமுருகனையும்(22) கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த துரைமுருகன் சென்னை ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் 12 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன்(45), புதுச்சேரி வேல்ராம்பட்டை சேர்ந்த சந்திரசேகர் மகன் சத்யா(34) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்ற 10 பேரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்